ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 22 நவம்பர் 2017 (12:41 IST)

ரஷ்யாவில் ரா ரா; மாஸ்கோ அழகியின் வைரல் வீடியோ

ஸ்விட்லானா துளசி என்ற பெண் ரஷ்யாவில் நடைபெற்ற நடன போட்டியில் சந்திரமுகி படத்தில் வரும் ரா ரா பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியுள்ளார். 


 
ஸ்விட்லானா துளசியின் தந்தை இந்தியாவை பூர்விகமாக கொண்டவர். இவரது தாய் ரஷ்யாவை சேர்ந்தவர். இவர் ரஷ்ய பெண் ஒருவரிடம் கதக் நடன கலையை பயின்று தற்போது அதை அரங்கேற்றி வருகிறார். யூடியூப் தளத்தில் பிரபலமான நடன அழகிகளில் இவரும் ஒருவர். 
 
இவர் கதக் நடனத்தை ஆடுவது மட்டுமல்லாமல் பலரை திரட்டி அவர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார். இவருக்கு சமூக வலைதளங்களில் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இந்தியாவின் வட மாநிலங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பாலிவுட் பாடல்களுக்கு அதிகளவில் நடனமாடியுள்ளார்.
 
அண்மையில் ரஷ்யாவில் நடைபெற்ற நடன போட்டி ஒன்றில் சந்திரமுகி படத்தில் வரும் ரா ரா என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்பொது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 

நன்றி: Indrajeeth TV