1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : புதன், 22 நவம்பர் 2017 (22:17 IST)

என்னை யாராவது திருமணம் செய்து கொள்ளுங்கள்: வீடியோவில் ஆர்யா கெஞ்சல்

நடிகர் ஆர்யா, சினிமாவில் காதல் மன்னனாக இருந்தாலும் நிஜத்தில் அவரை இன்னும் யாரும் காதலிக்கவில்லை. இதனால் 36 வயதாகியும் இன்னும் அவருக்கு திருமணம் நடைபெறவில்லை. ஒருசில நடிகைகளை அவர் காதலிப்பதாக கூறப்பட்டு வந்தபோதிலும் அவையெல்லாம் வதந்தி என்பதே உண்மை





இந்த நிலையில் என்னை யாருக்காவது பிடித்திருந்தால் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று அவர் சற்றுமுன்னர் வெளியிட்ட வீடியோவில் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் மேலும் கூறியதாவது:

பொதுவாக அனைவரும் தங்களுடைய வாழ்க்கை துணையை வேலை பார்க்கும் இடம், நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்கள் மூலம் அல்லது திருமண இணையதளங்கள் மூலம் தேடுவார்கள். ஆனால் நான் அப்படி இல்லை. எனக்கு எந்த எதிர்பார்ப்புகளும் நிபந்தனைகளும் இல்லை. யாருக்காவது என்னை பிடித்திருந்தால், நான் ஒரு நல்ல வாழ்க்கை துணைவனாக இருப்பேன் என் நினைக்கும் நபர் உடனே எனக்கு 73301 73301 என்ற எண்ணுக்கு போன் செய்யவும். இது விளையாட்டு, வேடிக்கை அறிவிப்பு அல்ல' என்றும் ஆர்யா அந்த வீடியோவில் கூறியுள்ளார்.இனிமேலாவது ஆர்யாவுக்கு திருமணம் நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்