மோடி ஸ்டைலில் ஆத்திசூடி சொன்ன நிதியமைச்சர்! – பட்ஜெட் 2020
பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில ஒளவையாரின் ஆத்திச்சூடியை உதாரணம் காட்டி பேசியுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மத்திய அரசின் 2020 – 2021 ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிக்கையை வாசித்து வருகிறார். நாட்டில் விவசாயம் மற்றும் விவசாயிகளிம் நலனுக்காக முன்னெடுக்கப்பட்ட பணிகள் குறித்து பேசிய நிதியமைத்தர் ஒளவையாரின் ஆத்திச்சூடியில் இருந்து “பூமி திருத்தி உண்” என்ற பகுதியை மேற்கொள் காட்டி, மூன்று வரிகளில் விவசாயத்தின் மகிமையை ஒளவையார் உணர்த்தியுள்ளதாக கூறினார்.
சமீப காலங்களில் பிரதமர் மோடி தனது சந்திப்புகள் பலவற்றிலும் தமிழில் பேசி வரும் நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பேசியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பட்ஜெட் கூட்ட தொடரில் நிதியமைச்சர் தமிழ் செய்யுளை உதாரணம் காட்டியது குறிப்பிடத்தக்கது.