செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 31 ஜனவரி 2020 (08:49 IST)

நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று பொருளாதார ஆய்வு அறிக்கை – இன்று நாடாளுமன்ற கூட்டம்!

நாளை மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் நடைபெற உள்ள நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடுகிறது.

2020 – 2021ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டம் தொடங்குகிறது. மக்களைவை, மாநிலங்களவை இரு அவை உறுப்பினர்களும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதில் தொடக்க உரையாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச இருக்கிறார்.

ஜனாதிபதி உரையை தொடர்ந்து 2019 – 2020 ஆண்டிற்கான பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. தற்போதைய நிதி ஆண்டில் நாட்டின் ஜிடிபி மதிப்பு, பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்திருப்பதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து அரசு என்ன மாதிரியான விவரங்களை வெளியிடப்போகிறது என்னும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.