1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Mumbai share market points down before budget issue

இன்று பட்ஜெட் தாக்கல்: சரிவை சந்தித்துள்ள பங்குசந்தை!

National
இன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பங்குசந்தை புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளன.

2020 – 2021 ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பாராளுமன்ற கூட்டத் தொடரில் 2019-2020ம் ஆண்டிற்கான பொருளாதார அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் தொடங்க உள்ள நிலையில் மும்பை பங்குசந்தை புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளன. சென்செக்ஸ் புள்ளிகள் 279 புள்ளிகள் குறைந்து 40,444 ஆகவும், நிப்டி 81.42 புள்ளிகள் சரிந்து 11,880.65 புள்ளிகளாகவும் உள்ளது.

பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து பங்குசந்தை புள்ளிகளின் ஏற்ற இறக்கங்கள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
செங்கல்பட்டு டோல்கேட் கலவரம்: ஊழியர்களே பணத்தை திருடியது அம்பலம்!