திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: புதன், 8 அக்டோபர் 2025 (09:22 IST)

இனி அனைத்து தேர்தல்களிலும் புதிய நடைமுறைகள்! தேர்தல் ஆணையம் புதிய அதிரடி!

இனி அனைத்து தேர்தல்களிலும் புதிய நடைமுறைகள்! தேர்தல் ஆணையம் புதிய அதிரடி!

வளர்ந்து வரும் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி தேர்தலை மேலும் பாதுகாப்பாக நடத்த தேவையான புதிய நடைமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் 2 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பீகார் தொடங்கி இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் தேர்தல் ஆணையம் பின்பற்ற உள்ள நடைமுறைகள்:

 

அரசியல் கட்சி வாக்குச்சாவடி முகவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பது.

இந்தியா முழுவதும் உள்ள 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடியில் அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு டெல்லியில் சிறப்பு பயிற்சி

தேர்தல் சமயத்தில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்த காவல்துறையுடன் சிறப்பு ஆலோசனை அமர்வு

அனைத்து மாநிலங்களிலும் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தயார் செய்தல்

தேர்தல் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள், போலீசார், கண்காணிப்பு குழு உள்ளிட்டோருக்கு ஊதிய உயர்வு அளித்தல்

வாக்காளர்கள் செல்போனை வாக்குச்சாவடிகளுக்கு வெளியே பத்திரமாக வைக்க பெட்டகங்கள் அமைத்தல்

கூட்ட நெரிசலை குறைக்க வாக்குச்சாவை வாக்காளர் வரம்பை 1200 ஆக நிர்ணயித்தல்

வாக்குச்சாவடி வாக்குப்பதிவுகளை 100 சதவீதம் இணையதள ஒளிபரப்பை மேற்கொள்ளுதல்

 

Edit by Prasanth.K