தொடர்புடைய செய்திகள்
- கேரளாவில் மீண்டும் கனமழை.. வயநாடு உள்பட 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!
- வயநாடு மக்களுக்கு 100 வீடுகள் கட்டித் தரப்படும்: கர்நாடக முதல்வர் சித்தராமையா
- வயநாடு சென்ற ராகுல் - பிரியங்கா தூத்துக்குடிக்கு ஏன் வரவில்லை? விளாசிய சீமான்...?
- வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு நிவாரணம் சேகரிக்கும் தாமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர்
- வயநாடு பேரிடர்... ஏர்டெல்லை அடுத்து இலவச சேவை வழங்கும் பிஎஸ்என்எல்..!
இதெல்லாம் உங்களுக்கு மறக்க முடியாத நினைவுகளா? சசிதரூர் எம்பி பதிவுக்கு கண்டனம்..!
காங்கிரஸ் எம்பி சசிதரூர் தனது சமூக வலைத்தளத்தில் வயநாடு பகுதிக்கு நிவாரண உதவி வழங்கும் வீடியோவை பதிவு செய்து மறக்க முடியாத நினைவுகள் என்று கூறி இருப்பதை அடுத்து வயநாடு சோகம் உங்களுக்கு மறக்க முடியாத நினைவா என நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசிதரூர் நேற்று நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவுக்கு வயநாட்டில் மறக்க முடியாத நாளின் சில நினைவுகள் என்று கேப்ஷனாக பதிவு செய்திருந்தார்.
இதனை அடுத்து நெட்டிசன்கள் இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உயிர் இழப்புகள், சோகங்களை முடியாத நிலவுகள் என்று கூறுவதா? சோகத்தால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் ஒரு மறக்க முடியாத நாளை கொண்டாட சென்றாரா? என்று சசிதரூருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இதனை அடுத்து சசி தரூர் அதற்கு விளக்கம் அளித்த போது மறக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளத்தக்கது அல்லது நினைவில் கொள்ளக்கூடிய ஒன்று என்ற பொருளில் தான் கூறினேன் என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் அவரது பதிலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
Edited by Siva
