செவ்வாய், 17 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (12:01 IST)

முதல்வர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! அல்கொய்தா காரணமா.? போலீசார் விசாரணை..!!

Nithish Kumar
பீகார் முதல்வர் நிதீஷ் குமார் அலுவலகத்திற்கு அல் கொய்தா பெயரில், இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
பீகாரில் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாட்னாவில் உள்ள முதல்வர் நிதீஷ் குமார் அலுவலகத்திற்கு அல்கொய்தா பெயரில் இ-மெயில் ஒன்று வந்தது. அதில் முதல்வர் அலுவலகத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
 
இதைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் சென்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால் இமெயிலில் வந்த மிரட்டல், வெறும் புரளி என்பது தெரியவந்தது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முதல்வர் அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 


மேலும் முதல்வர் அலுவலகத்திற்கு வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.