வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (20:45 IST)

டெல்லி தேர்தல் குறித்து ப.சிதம்பரம் கருத்துக்கு நெட்டிசன்கள் பதிலடி

டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிய நிலையில் இந்தத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில்  வெற்றி பெற்று உள்ளது. இதனை அடுத்து மீண்டும் இக்கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இன்னொரு தேசிய கட்சியான காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது மட்டுமன்றி 70 தொகுதிகளில் போட்டியிட்டு 67 தொகுதிகளில் டெபாசிட் இழந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து கூறிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் ’பாஜகவை எளிதில் வீழ்த்த முடியும் என்ற எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையை இந்த தேர்தல் முடிவுகள் ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் டெல்லி ஒரு மினி இந்தியா என்பதால் டெல்லி மாநில தேர்தல் அகில இந்திய வாக்கெடுப்புக்கு ஒப்பானது என்றும் கூறியுள்ளார் 
 
ப.சிதம்பரம் அவர்களின் இந்த கருத்து கொடுத்து நெட்டிசன்கள் கூறுகையில் அகில இந்திய அளவில் பாஜகவை வீழ்த்த முடியுமோ இல்லையோ காங்கிரஸ் கட்சியை ஜீரோவாக்க முடியும் என்பது இந்த தேர்தல் உறுதி செய்துள்ளது என்றும், ப.சிதம்பரம் கூறுவதுபோல் டெல்லி ஒரு மினி இந்தியா என்பதால் இந்த தேர்தலில் கிடைத்த ஜீரோ, இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் என்று பதிலடி கொடுத்து வருகின்றனர். ப. சிதம்பரம் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டி கொண்டதாக காங்கிரஸ் கட்சியினரே புலம்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது