1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (20:15 IST)

’பா பாண்டி’ இரண்டாம் பாகத்தில் கவுண்டமணி? பரபரப்பு தகவல்

’பா பாண்டி’ இரண்டாம் பாகத்தில் கவுண்டமணி?
கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் இரண்டாம் பாக திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு வருவது சகஜமாகிவிட்டது. இந்த நிலையில் தனுஷ் இயக்கிய முதல் திரைப்படமான ’பா பாண்டி’திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஸ்டண்ட் கலைஞர் ஒருவரின் இளமை காதல் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தனுஷ் முடிவு செய்திருப்பதாகவும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் கவுண்டமணி நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
 
ராஜ்கிரண் கேரக்டரில் கவுண்டமணி நடிக்கிறாரா? அல்லது ராஜ்கிரணுடன் இணைந்து கவுண்டமணி நடிக்கிறாரா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் இந்த படத்தின் முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மீண்டும் பணி செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தனுஷ் தயாரித்து இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது