திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (19:53 IST)

தேனி மாவட்ட காவல்துறையின் ’விஸ்வாசம்’ விளம்பரம்

தேனி மாவட்ட காவல்துறையினர் ’காவலன்’ செயலி குறித்த செய்திகளை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்த ’விஸ்வாசம்’ படத்தின் காட்சியை பயன்படுத்தியுள்ளனர்
 
தல அஜித் நடித்த ’விஸ்வாசம்’ படத்தில் தான் ஆபத்தாக இருப்பதை அஜித் மகள் தனது தாயார் நயன்தாராவுக்கு போன் செய்யும் காட்சியை குறிப்பிட்டுள்ள இந்த விளம்பரம், தன்னை யாரோ துரத்தி வருவார்கள் என்று கூறும் போது உடனே ’காவலன் செயலியை ஆன் செய்’ என்று நயன்தாரா பதிலளிப்பது போலவும் அதன் பின்னர் உடனடியாக போலீஸ் வந்து அவருக்கு உதவுவது போல் இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது 
 
தேனி மாவட்ட காவல்துறையின் ’விஸ்வாசம்’ விளம்பரம்
அஜித் படத்திலிருந்து காட்சியை எடுத்தது காவலன் செயலியின் விளம்பரம் உருவாக்கப்பட்டிருப்பதால் மிக விரைவாக மக்களிடம் போய் சேர்ந்து உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விளம்பரத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது