1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: சனி, 21 ஜூன் 2025 (10:17 IST)

நீங்க அந்த மதம்தானே.. இந்து மதத்துல ஏன் மூக்கை நுழைக்கிறீங்க? - அமீர் பேச்சுக்கு பேரரசு கண்டனம்!

Ameer vs Perarasu

மதுரை முருக பக்தர்கள் மாநாடு குறித்து இயக்குனர் அமீர் பேசிய கருத்துகளுக்கு இயக்குனர் பேரரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

மதுரையில் இந்து முன்னணி தலைமையில் முருக பக்தர்கள் மாநாடு நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த மாநாடு குறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் அமீர் “ஆன்மிகம் மக்களிடம்தான் இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் கையில் சிக்கக் கூடாது. வடநாட்டில் இருந்து வரக்கூடிய சங்கிகள் முருகனை தூக்கிப் பிடிப்பது ஆபத்தானது. மதுரை மக்கள் இடையே இப்படியான மாநாடுகள் மூலம் மதவெறுப்பை பரப்ப முயன்றால் அது நடக்காது” என பேசியிருந்தார்.

 

அமீரின் இந்த பேச்சை இயக்குனர் பேரரசு கண்டித்துள்ளார். அவர் பேசியபோது “முருக பக்தர்கள் மாநாட்டை ஒரு இந்துவோ அல்லது எந்த மத நம்பிக்கையும் இல்லாத கடவுள் மறுப்பாளர்கள் விமர்சிப்பது வேறு. அமீர் வேறு ஒரு மத நம்பிக்கையில் இருக்கிறார். அவர்களுக்கு ஒரு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. அவர் இந்து மத விவகாரங்களில் மூக்கை நுழைத்து கருத்து சொல்வது தேவையில்லாத ஒன்று. உங்களுக்கு இந்து மதத்தில் என்ன வேலை. உங்கள் மதத்தில் உள்ள நல்லது கெட்டதுகளை பேசுங்கள்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K