செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (19:42 IST)

டெல்லி தேர்தல் எதிர்கட்சிகளை ஊக்கப்படுத்துகிறது; ப சிதம்பரம்

கோப்புப்படம்

 


டெல்லி தேர்தல் எதிர்கட்சிகளின் நம்பிக்கையை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்

டெல்லி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளில் 51 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கவுள்ளது. மூன்றாவது முறையாக மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், டெல்லி தேர்தல் பாஜகவை வீழ்த்த முடியும் என்ற எதிர்கட்சிகளின் நம்பிக்கையை ஊக்கப்படுத்துவதாக உள்ளது” என கூறியுள்ளார்.

மேலும் அவர் “டெல்லி ஒரு மினி இந்தியா என்பதால் அம்மாநில தேர்தல் அகில இந்திய வாக்கெடுப்புக்கு ஒப்பானது” எனவும் கூறியுள்ளார்.