1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: சனி, 21 ஜூன் 2025 (12:57 IST)

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

F35B British Fighter

இந்தியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டிஷ் விமானத்தை ஹேங்கருக்கு கொண்டு செல்ல உதவுவதாக ஏர் இந்தியா முன்வந்த போதும் அதை பிரிட்டன் மறுத்துள்ளது.

 

உலக அளவில் பல நாடுகளும் அதிநவீன போர் விமானங்களை கொண்டுள்ள நிலையில் அதில் மிகவும் ப்ரதேயகமானது பிரிட்டிஷ் ராணுவத்தின் F 35B விமானங்கள். அமெரிக்காவில் தயாரிக்கப்படும் இந்த வகை போர் விமானங்கள் உலகில் மிகவும் செலவு வாய்ந்த போர் விமானங்களில் ஒன்றாக உள்ளது. அந்த அளவிற்கு அதன் தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு அம்சங்கள் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது.

 

இந்த விமானம் சமீபத்தில் இந்தோ - பசிபிக் பிராந்தியம் வந்தடைந்த நிலையில், இந்திய கடற்படையுடன் பயிற்சிகளிலும் ஈடுபட்டது. அப்போது கடந்த 14ம் தேதியன்று இந்த விமானம் அவசரநிலை காரணமாக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. 

 

இந்த விமானத்தை சரிசெய்ய பிரிட்டன் பொறியியல் குழுவினர் வருகை தந்துள்ளனர். விமானத்தை பழுது நீக்கும் பணிகளை மேற்கொள்ள ஏர் இந்தியா தங்களது ஹேங்கரை தர சம்மதம் தெரிவித்தது. ஆனால் அதை பிரிட்டிஷ் கடற்படை மறுத்துவிட்டது. பிற ஹேங்கர்களில் இந்த போர் விமானத்தை பழுது நீக்கினால் அதன் செயல்திறன், உயர்மட்ட தொழில்நுட்பங்கள் குறித்த விவரங்கள் கசியும் வாய்ப்புள்ளதால் மறுக்கப்பட்டதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

 

Edit by Prasanth.K