இது டெல்லி மக்களின் வெற்றி; பெருமையில் பொங்கும் கெஜ்ரிவால்

Kejriwal says delhi victory is also delhiwala victory
Arun Prasath| Last Modified செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (20:14 IST)
அரவிந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சி மீண்டும் டெல்லியில் ஆட்சியை கைப்பற்றியிருக்கும் நிலையில், “இது டெல்லி மக்களின் வெற்றி” என கூறியுள்ளார்.

டெல்லி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளில் 54
தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கவுள்ளது. மூன்றாவது முறையாக மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.

இந்நிலையில் தனது கட்சி அலுவலகத்தில் தொண்டர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், இந்த தேர்தல் முடிவு மூல புது மாதிரியான அரசியல் பிறக்க வழி கிடைத்துள்ளது. இந்த வெற்றி டெல்லிக்கான வெற்றி மட்டுமல்ல, டெல்லி மக்களின் வெற்றி. மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற்றுள்ளோம், கடவுள் அனுமன் நம்மை ஆசீர்வதித்துள்ளார், அடுத்த 5 ஆண்டுகளும் சிறப்பாக அமைய கடவுளை வேண்டிக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :