1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: சனி, 21 ஜூன் 2025 (13:12 IST)

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

Sattai Duraimurugan

சமீபத்தில் ஆப்பிரிக்க பழங்குடியினர் முதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தியதாக வீடியோ வெளியான நிலையில் அதே பழங்குடியினர் சாட்டை துரைமுருகனை வாழ்த்தும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

 

சமீபத்தில் திமுக வட்டாரத்தில் ஒரு வீடியோ வைரலானது. அதில் ஆப்பிரிக்க பழங்குடி மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தும் விதமாக அவரது போட்டோவை வைத்துக் கொண்டு வாழ்த்துவதாக இருந்த அந்த வீடியோவை பகிர்ந்த திமுகவினர், தமிழகத்தில் பழங்குடி மக்களுக்காக மு.க.ஸ்டாலின் அறிவித்த திட்டங்களை ஆப்பிரிக்க பழங்குடியினர் பாராட்டியுள்ளதாக பேசி வந்தனர்.

 

ஆனால் பின்னர் வேறு சில நெட்டிசன்கள் அந்த வீடியோவை ஆராய்ந்ததில் அந்த பழங்குடியினர் பணம் கொடுத்தால் யாருக்கு வேண்டுமானாலும் பிறந்தநாள் வாழ்த்து, திருமண வாழ்த்து உள்ளிட்டவற்றை தெரிவித்து ஆடி, பாடி வீடியோ வெளியிடுவார்கள் என தெரிய வந்தது.

 

அதை நிரூபிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சி பிரமுகர் சாட்டை துரைமுருகன் போட்டோவை வைத்துக் கொண்டு அவர்கள் ஆடும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. இதை சாட்டை துரைமுருகனே செய்தாரா அல்லது அவரது ஆதரவாளர்கள் செய்தார்களா என்பது தெரியவில்லை. ஆனால் அந்த வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K