ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 12 செப்டம்பர் 2019 (14:09 IST)

விக்ரமை எப்படியாவது எழுப்பணும்! – களத்தில் இறங்கிய நாசா

சந்திரனில் விழுந்து கிடக்கும் விக்ரம் லேண்டரை மீட்டெடுக்கும் இஸ்ரோவின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில் “விக்ரமை எழுப்பியே தீருவோம்” என களம் இறங்கியிருக்கிறது அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம்.

நிலவின் தெந்துருவத்தை ஆராய இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலத்தை அனுப்பியது. 95 சதவீதம் வெற்றிகரமான அந்த திட்டத்தில் விக்ரம் லேண்டர் மட்டும் திட்டமிட்டதற்கு மாறாக சிக்னலை இழந்து நிலவில் விழுந்து விட்டது. விக்ரம் லேண்டருக்குள் இருக்கும் ரோவர் வெளியேறி சென்று ஆராய்ந்தால் நிலவில் கனிம வளங்கள் குறித்த அதிகமான தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.

விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் 14 நாட்களே என்பதால் அதற்குள் அதை தொடர்பு கொள்ள வேண்டும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அனைத்து முயற்சிகளும் பலன் தராது போக, தற்போது இஸ்ரோவுக்கு உதவ களம் இறங்கியிருக்கிறது நாசா.

நாசா தனது அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விக்ரம் லேண்டருக்கு சிக்னல் அனுப்பியுள்ளது. இதற்கான பதில் சமிக்ஞை இரண்டு நாட்களில் திரும்ப வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 6 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில் விக்ரம் லேண்டர் தொடர்பை பெற்றால் மீதமுள்ள 8 நாட்களுக்குள் ஓரளவு ஆராய்ச்சியையாவது வெற்றிகரமாக செயல்படுத்திவிட முடியும் என கூறப்படுகிறது. தற்போது விக்ரமின் பதிலுக்காக இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகளும் காத்திருக்கிறார்கள்.