லேண்டரில் இருந்து தகவல் தொடர்பு கிடைப்பது சிரமம்தான்: ஐரோப்பிய விண்வெளி மையம்

Last Modified புதன், 11 செப்டம்பர் 2019 (20:45 IST)
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகளால் அனுப்பபட்ட சந்திராயன்-2 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் பிரிந்து, நிலவில் தரையிறங்க கடைசி நேரத்தில் திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விண்வெளியில் இயங்கக்கூடிய சாதனத்துடன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது இயல்பான ஒன்றே என்றாலும், விக்ரம் லேண்டர் இருந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆன நிலையில், இதுவரை அதனுடன் தொடர்புகொள்ள விஞ்ஞானிகளால் முடியவில்லை


விக்ரம் லேண்டர் உடன் தொடர்பு கொண்டு அதனை செயல்படுத்த வைக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஐரோப்பிய விண்வெளி மையம் இதுகுறித்து கருத்து தெரிவித்த போது, ‘நிலவின் மேற்பரப்பில் இருக்கும் சுற்றுச்சூழல் மிகவும் சிக்கலானது என்றும், அங்கு இருக்கும் நுண்ணிய மாசு மற்றும் கதிர்வீச்சு லேண்டருடன் தொடர்புகொள்ள இடையூறாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது


மேலும் நிலவின் தென் துருவத்தில் கடுமையான மாசு இருப்பதால் அந்த மாசு, லேண்டரின் மேல் பகுதியில் ஒட்டிக் கொண்டு அதை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்படும் என்றும், இதன் காரணமாக லேண்டரில் இணைக்கப்பட்டுள்ள சோலார் பேனலின் செயல்திறன் குறையும் என்றும், இதனால் லேண்டர் நிரந்தரமாக செயல் இழக்கும் ஆபத்து இருப்பதாகவும் ஐரோப்பிய விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கையை தளர விடாது லேண்டருடன் தொடர்பு கொள்வதில் தீவிர முயற்சியில் உள்ளனர்


இதில் மேலும் படிக்கவும் :