மிக மிக குறைந்த விலையில்!?? - பிரதமர் மோடியின் பரிசு பொருட்கள் ஏலம்!

Prasanth Karthick| Last Updated: புதன், 11 செப்டம்பர் 2019 (17:51 IST)
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுப்பொருட்களை ஏலத்திற்கு விட இருப்பதாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி உள் நாடுகளிலும், வெளி நாடுகளிலும் பல இடங்களுக்கு அரசியல் நிமித்தமான பயணங்களை மேற்கொள்கிறார். அப்போது அங்கிருக்கும் முக்கியஸ்தர்கள் பலர் பிரதமருக்கு பரிசுப்பொருட்களை வழங்குகின்றனர். இதனால் பிரதமர் மோடிக்கு ஆயிரக்கணக்கில் பரிசு பொருட்கள் வந்து குவிந்து விடுகின்றன.

கடந்த ஜனவரி மாத கணக்கின்படி பிரதமருக்கு மொத்தமாக 1800 பரிசுப்பொருட்கள் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றை ஏலத்திற்கு விட்டு கிடைத்த பணம் கங்கை நதி தூய்மை திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது பிரதமருக்கு 2500க்கும் மேற்பட்ட பரிசுகள் குவிந்துள்ளன. அவற்றை ஏலத்திற்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏலத்தின் தொடக்கவிலை 200 ரூபாய் முதல் அதிகபட்சமாக 2.5 லட்சம் வரை இருக்கும் என கூறியுள்ளார்கள்.

செப்டம்பர் 14 முதல் ஆன்லைனில் தொடங்கப்படும் இந்த ஏலத்தில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :