திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 28 நவம்பர் 2019 (15:35 IST)

ஃபட்நாவிஸ் ராஜினாமாவிற்கு வருத்தப்பட்டாரா மோடி?? உண்மை பின்னணி என்ன??

மஹாராஷ்டிராவில் தேவேந்திர ஃபட்நாவிஸ் ராஜினாமா செய்ததை தொடர்ந்து பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்து டிவீட் செய்ததாக பரவும் செய்தியின் உண்மை தன்மையை குறித்து தற்போது காணலாம்.

மஹாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக ஃபட்நாவிஸ் ராஜினாமா செய்ததற்கு மோடி வருத்தம் தெரிவித்து டிவிட் செயததாக ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவிவருகிறது.

தற்போது இதன் உண்மை தன்மை தெரியவந்துள்ளது. அதாவது ஃபட்நாவிஸ் பதவியேற்றபோது, மோடி வாழ்த்துகள் தெரிவித்து நவம்பர் 23 அன்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஆனால் ஃபட்நாவிஸ் நவம்பர் 26 அன்று மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் ஃபட்நாவிஸ் ராஜினாமா குறித்து எந்த டிவிட்டும் அவரது டிவிட்டர் பக்கத்தில் காணமுடியவில்லை. இதன் மூலம் அது போலியான செய்தி என தெரியவந்துள்ளது.