திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: புதன், 27 நவம்பர் 2019 (12:59 IST)

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது கார்டோசாட் 3

பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட கார்டோசாட் 3 செயற்கைகோள் சுற்றுவட்டபாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

பூமியை கண்காணித்து துல்லியமான தகவல்களை அனுப்புவதற்காகவும், இந்திய எல்லைகளை கண்காணித்து தகவல் அனுப்பவும், இஸ்ரோ விஞ்ஞானிகள் கார்டோசெட்-3 என்ற செயற்கைகோளை தயாரித்துள்ளனர்.

இந்த செயற்கைகோள் இன்று பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. பின்பு பூமியின் சுற்றுவட்டபாதையை அடைந்ததும், கார்டோசெட்-3 செயற்கைகோள் தனியாக பிரிக்கப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. அதாவது பூமியில் இருந்து 509 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றுவட்டபாதையில் நிறுத்தப்பட்டுள்ளது. வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிறுத்தப்பட்டதால் இஸ்ரரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்தனர்.