இன்று முதல்வராக பதவியேற்கிறார் தாக்கரே..
உத்தவ் தாக்கரே இன்று மஹாராஷ்டிராவின் முதல்வராக பதவியேற்க உள்ளார்.
மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கான இழுபறி நடைபெற்ற வேளையில் பாஜகவை சேர்ந்த ஃபட்நாவிஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆதரவுடன் முதல்வராக பதவியேற்றார். இதனை தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பாஜக ஆட்சியமைத்தை எதிர்த்து வழக்கு தொடுத்தனர்
அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அடுத்த நாளே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. அதன் பின்பு திடீர் திருப்பமாக ஃபட்நாவிஸ் மற்றும் துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவார் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியமைக்கிறது. அதன் படி இன்று மாலை சிவசேனாவின் உத்தவ் தாக்கரே மஹாராஷ்டிராவின் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.