வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 28 நவம்பர் 2019 (11:50 IST)

கடைக்குள் புகுந்து வெங்காயத்தை திருடிய கொள்ளையர்கள்..!!

கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் பணத்திற்கு பதில் வெங்காயத்தை திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் வெங்காய விலை அதிகரிப்பால், வெங்காய விலை அதிகரிப்பால் பெரும் தட்டுப்பாட்டு நிலவுகிற நிலையில் மேற்கு வங்க மாநிலம் சுடஹட்டா பகுதியில் அக்‌ஷய் தாஸ் என்பவருக்கு சொந்தமான கடை ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காலையில் வழக்கம் போல அக்‌ஷய் தாஸ் கடையை திறக்க சென்றபோது கடை உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த அக்‌ஷய் கல்லா பெட்டியை திறந்து பார்த்தார். பணம் அப்படியே இருந்துள்ளது. ஆனால் கொள்ளையர்கள் திருடிச்சென்று போனதோ ரூ.50,000 மதிப்பிலான வெங்காயத்தை. மேலும் வெங்காயத்துடன் இஞ்சி, பூண்டு ஆகியவையும் திருடப்பட்டுள்ளது.