திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : வியாழன், 28 நவம்பர் 2019 (12:50 IST)

வைகோ கைது செய்யப்பட்டார்..!

ராஜபக்‌ஷேவின் வருகையை எதிர்த்து போராட்டம் நடத்திய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தப்பய ராஜபக்சே வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்றார்.

ஈழத்தில் நடைபெற்ற உள்நாட்டு போரில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது மஹிந்த ராஜபக்சேவின் ஆட்சியில் தான் என ஈழத்தமிழர் ஆதரவாளர்கள் கண்டனங்கள் தெரிவித்துவரும் நிலையில் கோத்தபய ராஜபக்சே டெல்லிக்கு வருகை புரிகிறார்.

கோத்தப்பய ராஜபக்சேவின் வருகையை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தினார். இதனை தொடர்ந்து போராட்டம் நடத்தியதற்காக வைகோ போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோத்தப்பய ராஜபக்சே இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றது ஒரு ”துக்க நாள்” என வைகோ கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.