வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 15 ஆகஸ்ட் 2018 (08:34 IST)

வரி செலுத்துவோருக்கு பாராட்டுக்கள் - பிரதமர் மோடி சுதந்திர தின உரை

72வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றி வருகிறார்.
இந்தியாவின் 72-வது ஆண்டு சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடி ஏற்றி மறைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறார்கள்.
 
அந்த வகையில் இந்திய பிரதமர் மோடி செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க தேசியக்கொடியேற்றினார். பின் முப்படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
 
அதனைத் தொடர்ந்து நாட்டு மக்களிடன் மோடி உரையாற்றி வருகிறார். அதில், 
 
நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றனர். சுப்ரீம் கோர்ட்டில் 3 பெண் நீதிபதிகள் உள்ளனர். இந்த அரசு பெண்கள் உரிமை மீது அதிக அக்கறை கொண்டுள்ளது. அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கு அதிகரித்து வருகிறது.
 
முறையாக வரி செலுத்துவோருக்கு எனது பாராட்டுக்கள். எப்பொழுது இல்லாதவாறு இந்த ஆண்டு வரி செலுத்துவோரின் எண்ணிக்கை கூடியுள்ளது.
 
அவர்கள் முறையாக வரி செலுத்துவதால் தாம், எங்களால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த முடிகிறது.  சர்வதேச அளவில் வலிமையான பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா 6வது இடத்தை பிடித்துள்ளது.
 
பாஜக ஆட்சியில் எய்ம்ஸ், ஐஐடிக்களை ஏற்படுத்தியுள்ளோம், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான பல நல்ல திட்டங்களை பாஜக அரசு வகுத்துள்ளது. மேலும் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது என மோடி பேசி வருகிறார்.