வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (19:26 IST)

அரசியல் விஸ்வரூபம்: கமல் அதிரடி பேச்சு!

கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் படம் திரையிடப்பட்டது. 
இதன் பிறகு கமல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் விஸ்வரூபம் 3 குறித்து கேள்வி கேட்டபோது, சினிமாவில் இல்லை. நிஜத்தில்தான் விஸ்வரூபம் எடுக்க இருக்கிறேன். இங்கு நான் பயிற்சி எடுத்த காலம் குறுகியது தான், ஆனால் கற்றுக்கொண்டது நிறைய.
 
இந்திய ராணுவத்தில் நாம் அதிகம் பங்கெடுக்க வேண்டும் அது என்னுடைய ஆசை. பயிற்சியின் போது இடம்பெற்ற ராணுவ அதிகாரிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளனர். இங்குள்ள உண்மையான ராணுவ வீரர்கள் உடன் பணியாற்றியது பெருமையாக உள்ளது.
 
படித்த இளைஞர்கள் அதிகாரிகளாக வர வேண்டும், இதுவும் அவர்கள் கடமையென நாடு காக்கும் பணியை செய்ய முன்வர வேண்டும். ஆனால் யாரையும் கட்டாயபடுத்தக் கூடாது என தெரிவித்தார்.