1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (16:45 IST)

நான் திருமணம் செய்து கொண்டேன்: ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தான் காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்துக்கொண்டதாக கூறியுள்ளார்.

 
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜாகவை வீழ்த்த தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். கர்நாடகா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்த ராகுல் காந்தி தற்போது ஹைதராபாதில் முகாமிட்டுள்ளார்.
 
மத்தியில் ஆளும் பாஜக வரும் தேர்தலில் 230 மக்களவை இடங்களை பெறாது என்று கூறினார். அப்போது பேசியவர், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அல்லாத இதர கட்சிகளுக்கு தெளிவான பெரும்பான்மை கிடைக்கும்.
 
தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் என நம்புகிறோம் என்று கூறினார். அப்போது அவர் திருமணம் குறித்த கேள்வி கேட்ட போது, தான் காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்துக்கொண்டதாக கூறினார்.