வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 29 ஜனவரி 2020 (09:10 IST)

போர் வந்தால் பாகிஸ்தானை வீழ்த்த 12 நாட்கள் கூட ஆகாது: மோடி எச்சரிக்கை!

பாகிஸ்தான் – இந்தியா இடையே போர் வந்தால் பாகிஸ்தானை வீழ்த்த 12 நாட்கள் கூட ஆகாது என பிரதமர் மோடி மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்று வரும் என்சிசி அமைப்பின் ஒரு மாத கால முகாமில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த என்சிசி மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மோடி என்சிசி மாணவர்களின் அணிவகுப்பை கண்டு ரசித்தார்.

பிறகு பேசிய பிரதமர் மோடி இதற்கு முன்னால் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கேள்வி எழுப்பினார். நான்கு குடும்பங்கள் காஷ்மீர் விவகாரத்தை பூதாகரமானதாக மாற்றிவிட்டதாக குற்றம் சாட்டினார். சிஏஏவுக்கு எதிராக போராடுபவர்கள் பாகிஸ்தானில் சிறுபான்மையினர் துன்புறுத்தலுக்கு உள்ளாவதை கண்டுகொள்ள மறுக்கிறார்கள். போர் மூளும் சூழல் ஏற்பட்டால் பாகிஸ்தானை வீழ்த்த 12 நாட்கள் கூட ஆகாது என எச்சரிக்கை விடுக்கும் தோனியில் பேசியுள்ளார்.

இந்தியாவின் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து பாகிஸ்தான் தனது அணு ஆயுத ஏவுகணையை சோதனை செய்து வெற்றிப்பெற்றது. அதை தொடர்ந்து பிரதமர் இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.