செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 ஜனவரி 2020 (10:56 IST)

பழ வியாபாரிக்கு பத்ம ஸ்ரீ விருது: அப்படி என்ன சாதித்தார்?

கர்நாடகாவில் உள்ள எழுத படிக்க தெரியாத பழ வியாபாரி ஒருவருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள சம்பவம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மிக உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் பலருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

கர்நாடகாவை சேர்ந்த பழ வியாபாரி ஹரேகலா கஜப்பா. நியூபடப்பு கிராமத்தை சேர்ந்த இவர் எழுத படிக்க தெரியாதவர். கூடையில் ஆரஞ்சு பழங்களை கொண்டு சென்று ஊர் ஊராக விற்று வருபவர். தனது கிராமத்தில் உள்ள குழந்தைகள் கல்வி பயில வேண்டும் என்பதற்காக தனது சொற்ப வருமானத்திலும் கொஞ்சம் பணம் சேர்த்து பிற இடங்களில் கடன் வாங்கி தனது கிராமத்திலேயே முதன்முறையாக பள்ளி ஒன்றை தொடங்கியுள்ளார். ஏழ்மையான நிலையிலும் மாணவர்கள் படிக்க கஜப்பா செய்த இந்த முயற்சியை பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவித்துள்ளது.

இதுபற்றி எதுவுமே அறியாமல் ரேசன் கடையில் பொருட்கள் வாங்க வரிசையில் காத்திருந்த கஜப்பாவிடம் அதிகாரிகள் சென்று இந்த தகவலை தெரிவித்துள்ளனர். கஜப்பாவின் முயற்சிக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.