திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 ஜனவரி 2020 (16:07 IST)

இந்தியா உலகின் கற்பழிப்பு தலைநகரம்! – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியா மொத்த உலகத்தின் கற்பழிப்பு தலைநகரமாக மாறிவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ”பிரதமர் மோடி 2 கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் வேலையில் இருந்த 1 கோடி இளைஞர்கள் வேலையை இழந்துள்ளனர். பிரதமர் எங்கு சென்றாலும் குடியுரிமை சட்டம் குறித்து பேசுகிறாரே தவிர வேலையின்மை பிரச்சினை குறித்து பேசுவதில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும் உலகில் இந்தியா கொண்டிருந்த நற்பெயர் என்னவென்றால் அது சகோதரத்துவம், அன்பு மற்றும் ஒற்றுமை. ஆனால் அந்த பிம்பத்தை நரேந்திர மோடி மொத்தமாக சீர்குலைத்து விட்டார். இன்று இந்தியா உலகின் கற்பழிப்பு தலைநகரமாக கருதப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே பாராளுமன்றத்தில் மேக் இன் இந்தியா திட்டத்தை ரேப் இன் இந்தியா என ராகுல் பேசியது சர்ச்சையான நிலையில் மீண்டும் இவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.