ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 31 ஜனவரி 2022 (16:48 IST)

தொடர் பிரச்சாரம் செய்யும் கமல்ஹாசன்

வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தமிழகத்தில்  நகராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், அனைத்துக்கட்சிகளும்  தங்கள் வேட்பாளர்களைத் தேர்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் 6-ஆவது பட்டியலை வெளியிடுகிறேன். இவர்கள் உங்களுள் ஒருவர் என்பதும் உங்களுக்கான ஒருவர் என்பதும் இவர்களின் தனித்தகுதிகள். தகுதி மிக்க இவர்களை வெற்றி பெறச் செய்வது உங்கள் கடமை எனப் பதிவிட்டிருந்தார்.

 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிப்ரவரி 6 ஆம் தேதி முதல்  தொடர்ச்சியாக 10 நாட்கள் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகிறது.