வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (15:02 IST)

எம்.எல்.ஏ வை பண மழையால் குளிப்பாட்டிய அவரது ஆதரவாளர்கள்

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு அவரது ஆதரவாளர்கள் பண மழையில் வரவேற்பளித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
கர்நாடக மாநிலம் பிதார் தெற்கு தொகுதியின் எம்.எல்.ஏ. அஷோக் கின்னி மானாலி. இவர் காங்கிரஸ் கட்சியயைச் சேர்ந்தவர். எம்.எல்.ஏ வான அஷோக் பிதாரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். 
 
விழாவிற்கு சென்ற அஷோக்கின் மீது, ஆதரவாளர் ஒருவர்  கட்டுக்கட்டாக பணத்தை வீசி வரவேற்றார். அவர் தன்மீது விழுந்த பணத்தை கிராம மக்களை நோக்கி எறிந்தார். சுத்தி இருந்த மக்கள் அவர் வீசிய பணத்தை எடுக்க ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். இதனால் சற்று நேரம் அங்கு அசாதாரண சூழல் உருவாகியது. எம்.எல்.ஏ வின் இந்த பொறுப்பற்ற செயலுக்கு எதிர்கட்சி தலைவர்கள் தங்களது கண்டணங்களை பதிவிட்டு வருகின்றனர்.
 
மக்களின் பிரதிநிதியாக இருந்து கொண்டு, இதுபோன்ற மட்டமான செயல்களில் ஈடுபடுவது கண்டனத்துக்குறியது என்று சமூக ஆர்வலர்கள் பலர் தெரிவித்துள்ளனர். தற்பொழுது வரை அமைச்சர் சார்பில் இருந்து எந்த ஒரு மன்னிப்பும் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.