திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 1 பிப்ரவரி 2018 (16:57 IST)

கர்நாடகாவில் கிழிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் பேனர் - தமிழர்கள் அதிர்ச்சி

நடிகரும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வருமான எம்.ஜி.ஆரின் உருவ படம் பொதிந்த பேனர் கர்நாடகாவில் கிழிக்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
தமிழக மட்டுமிலாமல் பக்கத்து மாநிலங்களின் அபிமானத்தையும் பெற்றவர் எம்.ஜி.ஆர். நடிகராக திரையுலகில் நுழைந்து பின் தமிழக முதல்வராக 3 முறை பதவி வகித்தவர். தற்போதும் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது அவரின் நூற்றாண்டு விழாவை அதிமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மேலும், தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவை விரைவில் சந்திக்கவுள்ளார்.
 
இந்நிலையில், பெங்களூர் இந்திரா நகர் பகுதியில் உள்ள அல்சூர் லட்சுமிபுரம் என்ற இடத்தில் அங்கு வசிக்கும் தமிழர்கள் எம்.ஜி.ஆரின் 101வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ஒரு பேனர் வைத்திருந்தனர். அந்த பேனரில் கன்னடம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எம்.ஜி.ஆருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், அந்த இடத்திற்கு வந்த சில கன்னட அமைப்பினர், எம்.ஜி.ஆரை நாங்கள் மதிக்கிறோம். அவர் ஒரு மலையாளி. அவருக்கு கர்நாடகாவில் என்ன வேலை?. இங்கு ராஜ்குமாருக்கு மட்டும்தான் பேனர் வைக்க வேண்டும் எனக்கூறி அந்த பேனரை கிழித்து எறிந்தனர்.
 
அந்த இடத்தில் இருந்த சிலர் அதை தங்கள் மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இதைக்கண்ட எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.