ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 31 ஜனவரி 2018 (18:39 IST)

பைபிள், குரான் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் செங்கோட்டையன்!

கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் குரானில் சொல்லப்பட்ட ஒரு வசனத்தை பைபிளில் கூறப்பட்டதாக கூறியும், குரானை பற்றி கூறாமல் அதனை மறந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை வடபழனி முருகன் கோயிலில் சம்பந்தி போஜனம் தைப்பூசத்தை முன்னிட்டு நடைபெற்றது. இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்து பேசினார்.
 
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக என்றைக்குமே இறைவழிப்பாட்டை நேசிக்கும் மதசார்பற்ற அரசாக விளங்குகிறது. அதன் அடிப்படையில் கீதையில் உள்ளதை போல கேட்டதை கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா என இந்து மதம் கூறுகிறது.
 
அதே போல பைபிளில் என்ன சொல்கிறது என்றால் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை. அதே போல கிறிஸ்துவ மதத்தில் தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. ஆகவே இறைவனிடம் கேட்டால் எல்லாம் கிடைக்கும் என்பதே அனைத்து மதங்களின் தத்துவம் என கூறினார்.
 
இறைவனிடம் கையேந்துங்கள் என்ற முஸ்லீம் வழிப்பாட்டு பாடலை பைபிளில் கூறப்பட்டுள்ளதாக தவறுதலாக குறிப்பிட்ட அமைச்சர் செங்கோட்டையன் முஸ்லீம்களின் புனித நூலான குரான் பற்றி பேசினாலா இல்லையா என்ற கவலையே இல்லாமல் தொடர்ந்து பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.