திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 1 பிப்ரவரி 2018 (09:26 IST)

இன்றைய பட்ஜெட் தாக்கல் நடுத்தர மக்கள் லாபமடையும் விதமாக இருக்கும் ; மத்திய நிதி இணை அமைச்சர்

2018-2019 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்த வருட பட்ஜெட் நடுத்தர மக்களுக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்று மத்திய  நிதி இணையமையச்சர் சிவ் பிரதாப் சுக்லா உறுதியளித்து இருக்கிறார்.
பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இது அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் கடைசி முழுமையான பட்ஜெட் ஆகும். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்.
 
இதுகுறித்து பேசிய நிதி இணையமையச்சர் சிவ் பிரதாப் சுக்லா, இந்த வருட பட்ஜெட் நடுத்தர மக்களுக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் இன்றைய பட்ஜெட் தாக்கல் மூலம் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் அதிக பயன் அடைவார்கள் என்று கூறியிருக்கிறார்.
மேலும் நூறு நாள் வேலை திட்டம், கிராமப்புற வீட்டு வசதி திட்டம், நீர்ப்பாசன திட்டங்கள், பயிர் காப்பீடு ஆகிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலைவாய்ப்பை பெருக்கும் வகையிலும், வளர்ச்சியை அதிகரிக்கும் வகையிலும் அருண் ஜெட்லியின் பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.