திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 24 அக்டோபர் 2022 (14:22 IST)

தீவிரமாக வலுவடையும் சிட்ரங் புயல்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

cyclone
வங்க கடலில் உருவாகியுள்ள சிட்ரங் என்ற புயல் தீவிரமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு என குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
 
இந்த நிலையில் நேற்று மாலை புயலாக மாறிய நிலையில் தீவிரமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சிட்ரங்  என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 இருப்பினும் தமிழ்நாடு ஒடிசா மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva