தமிழகத்தில் மூன்று நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் தீபாவளி நாள் உள்பட 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் தீபாவளி கொண்டாட இருக்கும் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வருவதை அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு திசையில் நகர்ந்து நாளை அதாவது தீபாவளி தினத்தில் புயலாக வருடம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாட்களுக்கு தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது
சென்னை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டம் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளை மட்டும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Edited by Siva