ஆந்திரா மர்ம நோய்க்கு என்ன காரணம்? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
கடந்த இரண்டு நாட்களாக ஆந்திர மாநிலத்தில் உள்ள எலுரு என்ற பகுதியில் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திடீர் திடீரென வாந்தி மயக்கம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டனர் என்பதும், கடந்த மூன்று நாட்களில் சுமார் 480 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன
இந்த நிலையில் திடீர் திடீரென வாந்தி மயக்கம் ஏற்படுவது ஏன் என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்ததில் நிக்கல் மற்றும் காரியம் உள்ளிட்ட வேதிப்பொருள்கள் அவர்களது உடலில் இருந்தது தெரியவந்துள்ளது
இது குறித்து மேலும் ஆய்வு செய்த போது எலுரு பகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட குடிநீர் மற்றும் பாலில் இந்த உலோகங்கள் இருந்ததே காரணம் என்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவர்கள், விஞ்ஞானிகள் நடத்திய முதல் கட்ட ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல்களை வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உலோகங்கள் பால் மற்றும் குடிநீரில் கலந்தது எப்படி என்பது குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது