ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 6 டிசம்பர் 2020 (13:53 IST)

ஆந்திராவில் அடுத்தடுத்து 200 பேர் மயக்கம்: வித்தியாசமாக குரலில் கத்துவதால் பதட்டம்

ஆந்திராவில் அடுத்தடுத்து 200 பேர் மயக்கம்
ஆந்திர மாநிலத்தில் திடீரென கடந்த வெள்ளிக் கிழமையிலிருந்து அடுத்தடுத்து 200 பேருக்கும் ஒரே பகுதியில் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூர் என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் திடீர் திடீரென மயக்கம் போட்டு விழுந்தனர். இப்போது வரை அந்த பகுதியில் சுமார் 200 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததாகவும் மயக்கமடைந்த அனைவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
மேலும் மயங்கி விழுந்த மக்களின் வாயில் இருந்து நுரை வெளியேறி வருவதாகவும் அவர்கள் அவ்வப்போது வாந்தி எடுத்து வருவதுடன் வித்தியாசமான குரலில் கத்துவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
ஆந்திராவில் அடுத்தடுத்து 200 பேர் மயங்கி விழுந்ததற்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவர்கள் மற்றும் ஆந்திர அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த மர்ம செயலால் அந்த பகுதியில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது