கரப்பான் பூச்சி கட்சியில் பிளவு!.. புது கட்சியை திறந்த மனிஷ் பிரம்மாட்!..
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக அபிஜித் தீப்கே என்கிற இளைஞர் துவங்கிய கட்சிதான் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி. இந்த கட்சி பாஜக அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதாப் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி கட்சி மற்றும் பல இளைஞர்கள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர்..
போராட்டம் பல நாட்கள் நடைபெற்றது. போராட்டத்தை ஒடுக்க முடியாததாலும், போராட்டத்தின் வீரியத்தை புரிந்து கொண்டதாலும் மத்திய அரசு கரப்பான் பூச்சி கட்சியின் கோரிக்கையை ஏற்று தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்தார். இது ஒரு மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டது.
அதேநேரம் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீதான வழக்குகளை மத்திய அரசு தள்ளுபடி செய்யவில்லை.. உடனடியாக இதை செய்யாவிட்டால் மீண்டும் போராட்டத்தை நடத்துவோம் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே அறிவித்திருந்தார்.
இந்நிலையில்தான் கரப்பான் பூச்சி கட்சியிலிருந்து மனிஷ் பிரம்மபட் வெளியேறியிருக்கிறார்.. அதோடு கரப்பான் பூச்சி கட்சிக்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சி டெமாக்ரடிக் (CJP - D) என்கிற புதிய அமைப்பையும் அவர் தொடங்கியிருக்கிறார்.. கரப்பான் பூச்சி கட்சி அமைப்பு தனது அடிப்படை லட்சியத்திலிருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியின் கைப்பாவையாகவும், அரவிந்த் கெஜ்ரிவாலின் நலனுக்காகவும் செயல்படும் அமைப்பாக மாறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
ஆனால் பாஜகவுக்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சி உருவாகியிருப்பதால் அந்த கட்சியை உடைக்க பாஜகதான் சதி செய்து கரப்பான் பூச்சி கட்சியில் பிளவை ஏற்படுத்தியிருப்பதாக கரப்பான் பூச்சி கட்சியின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கூறிவருகிறார்கள்.