1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Manipur issue parliament adjourned third day

மணிப்பூர் விவகாரத்தால் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி.. 3வது நாளாக முடங்கிய பாராளுமன்றம்..!

மணிப்பூர்
மணிப்பூர் விவகாரம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பாராளுமன்றம் முடங்கிய நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் பாராளுமன்ற நடவடிக்கை தொடங்கிய சில நிமிடங்களை முடங்கியது. 
 
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி அவையில் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் அமளி காரணமாக மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டது. 
 
நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் தொடங்கிய சில மணி நேரத்திலேயே முடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  
 
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் எதுவும் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலையில் இனி வரும் நாட்களிலாவது நிறைவேற்றப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் 100% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்: சொன்ன அரசியல் பிரபலம் யார் தெரியுமா?