வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 29 மே 2020 (11:31 IST)

கோயிலுக்கு வந்தவரை கொரோனாவுக்காக பலி கொடுத்த பூசாரி – அதிர்ச்சி தகவல்!

கொரோனா நோயை குணமாக்க வேண்டும் என்று ஒடிசாவில் ஒரு கோயில் பூசாரி பக்தர் ஒருவரை பலி கொடுத்துள்ளார்.

கொரொனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் சிலர் செய்யும் மூடப்பழக்க வழக்கங்களும் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஒடிசா மாநிலம் கட்டக்கில் உள்ள கோயில் ஒன்றில் பூசாரியாக 72 வயது சன்சரி ஓஜா பணிபுரிந்து வந்துள்ளார்.

அந்த கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரிடம் கொரோனாவை ஒழிக்க, உன்னை நரபலிக் கொடுக்க சொல்லி கடவுள் என்னிடம் கூறினார் என்று தெரிவிக்க, அந்த நபர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும் எதிர்ப்பை மீறி அவரை வெட்டி பலிக் கொடுத்துள்ளார் பூசாரி. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சி அளிக்க பூசாரியை போலிஸார் கைது செய்துள்ளனர்.