1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 29 மே 2020 (07:32 IST)

60 லட்சத்தை நெருங்கும் உலக கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் படுமோசம்

உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினமும் லட்சக்கணக்கில் அதிகரித்து வரும் நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி உலகளவில் 59,04,284 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை நெருங்குவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
மேலும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,61,996 ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன்பின் குணமடைந்தோர் எண்ணிக்கை 25,79,505 ஆக அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது
 
உலகில் மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் 17,68,461 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் அந்நாட்டில் மட்டும் கொரோனாவுக்கு 103,330 பேர்கள் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்காவில் கொரோனா பாதித்த 17.68 லட்சம் பேரில், 4.98 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 438,812 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும், ரஷ்யாவில் 379,051பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும், ஸ்பெயினில் 284,986பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும், இங்கிலாந்தில் 269,127பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும், இத்தாலியில் 231,732 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும், பிரான்ஸில் 186,238பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும், ஜெர்மனியில் 182,452பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165,386 என்பதும் இந்தியாவில் மட்டும் கொரோனாவுக்கு 4,711பேர்கள் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது