வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 29 மே 2020 (08:07 IST)

கொரோனா தொற்றில் 13 நகரங்களின் டேஞ்சர் ஸோனில் – தமிழகத்தில் 3!

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் 13 நகரங்களில் மட்டும் அதிகளவிலான நோயாளிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் 13 குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் நாட்டின் 70 சதவீத நோயாளிகள் உள்ளனர். மும்பை, சென்னை, புதுடெல்லி, அகமதாபாத், தானே, புனே, ஐதராபாத், கொல்கத்தா, ஹவுரா, இந்தூர் (மத்தியப் பிரதேசம்), ஜெய்ப்பூர், ஜோத்பூர், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 13 நகரங்களின் மாநகராட்சி ஆணையாளர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள் ஆகியோருடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த அபாய பகுதிகளில் நோய்த்தொற்று வீதம், இறப்பு வீதம், இரட்டிப்பு வீதம், 10 லட்சம் பேருக்கு எத்தனை பேர் பரிசோதிக்கப்படுகின்றனர் போன்ற அளவீடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.