திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (08:32 IST)

கொரோனாவை விரட்ட நாக்கை வெட்டிக்கொண்ட இளைஞர் – வட இந்தியாவில் பரபரப்பு!

குஜராத் மாநிலத்தில் கோயிலில் வேலை செய்துகொண்டிருந்த 20 வயது இளைஞர் கொரோனாவை விரட்ட தனது நாக்கை வெட்டிக்கொண்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ரவீந்தர் சர்மா எனும் 20 வயது இளைஞர் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக குஜராத் மாநிலத்தில் உள்ள  பவானி மாதா கோவிலில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது கணவில் தேவி வந்து கொரோனாவை விரட்ட உன் நாக்கை வெட்டிக் கொள் என்று சொன்னதால் இவர் தனது நாக்கை வெட்டிக்கொண்டுள்ளார்.

இதையடுத்து அதிகப்படியான ரத்தப் போக்கால் அவர் மயக்கமடைய அவரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீட்டு சுகாமில் உள்ள ஒரு சிவில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவமானது வட இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.