வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : சனி, 18 ஏப்ரல் 2020 (17:18 IST)

நாட்டுக்கு 'கொரோனா' மிகப்பெரிய சவால் ...ராகுல் காந்தி

இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 14,378 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  1992 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 480 பேர்  உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நாட்டு மக்களைக் காப்பாற்ற நாடு முழுவதும் வரும் மே 3 ஆம் தேதி வரை  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  இந்தியாவில் இதுவரை உயிரிழப்பு விகிதம் 3.3 ஆக உள்ளது - மத்திய சுகாதாரத்துறை வயது வாரியாக உயிரிழந்தோர் விகிதம் :

0 - 45 : 14.4%
45 - 60 : 10.3%
60 - 75 : 33.1%
75+ : 42.2%

இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது :

கொரோனா தொற்று என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது அதேசமயம்  இதுஒரு வாய்ப்பாக உள்ளது. நமது மிகப்பெரிய அறிவியல் மற்றும் பொறியியல் வல்லுநர்கள், மற்றும் தரவு வல்லுநர்கள் ஆகியோர் புதிய சாதனைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த இவர்களை இணைத்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.