செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : சனி, 18 ஏப்ரல் 2020 (18:49 IST)

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா : 82 பேர் நலம் பெற்றனர் – விஜயபாஸ்கர்

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 14,378லிருந்து 14,792ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 480லிருந்து 488ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,323ல் இருந்து 1,372ஆக அதிகரித்ததுள்ளது.

இன்று மட்டும் 82 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இன்று மட்டும் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் மேலும் 4 பேர், பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 3 பேர் பாதிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.