புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (07:56 IST)

மகனின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத பெற்றோர்! வீடியோவில் பார்த்துக் கண்ணீர்!

கேரளாவைச் சேர்ந்த 12 வயது சிறுவன் துபாயில் இறந்துவிடவே அவனது உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்த நிகழ்வு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா, சம்மக்காவிளையல் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் துபாயில் வசித்து வருகின்றனர். இந்த குடும்பத்தில் உள்ள ஜோயல் என்ற சிறுவன் கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த வாரம் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளான்.

தனது மகனை கேரளா பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்ய விரும்பிய ஜோயலின் பெற்றோர் முயற்சி செய்ய அவர்கள் சரக்கு விமானத்தில் உடலை எடுத்து செல்ல அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக சிறுவனின் உடலோடு யாரும் செல்ல முடியாது என் உறுதியாகக் கூறிவிட்டனர்.

இதனால் வேறு வழியில்லாமல் சிறுவனை மட்டும் கேரளாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிறுவனின் உடல் உறவினர்களால் அடக்கம் செய்யப்பட, அதை ஃபேஸ்புக் மூலம் நேரடியாக துபாயில் உள்ள ஜோயலின் பெற்றோரும், சகோதரர்களும் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கதறினர்.. இந்த செய்தியானது கேரள மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.