செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 22 நவம்பர் 2021 (18:01 IST)

ஷாருக்கானின் விளாசலை வியந்து பார்த்த தோனி!!

சிறந்த பினிஷரான தோனி, ஷாருக்கானின் ஆட்டத்தை ரசித்து பார்த்த  தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 
கடந்த சில நாட்களாக முஸ்டாக் அலி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இறுதிப் போட்டிக்கு தமிழகம் மற்றும் கர்நாடகா அணிகள் தகுதி பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கர்நாடக அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.
 
இதனை அடுத்து 152 என்ற இலக்கை நோக்கி விளையாடிய தமிழக அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 153 ரன்கள் எடுத்ததை அடுத்து தமிழக அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அணியின் நாராயணன் ஜெகதீசன் அதிகபட்சமாக 41 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இறுதிப் போட்டியில் 15 பந்துகளில் 33 ரன்களை விளாசி இருந்தார் ஷாருக்கான். அதில் 1 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். 
 
இந்நிலையில் சிறந்த பினிஷரான தோனி, ஷாருக்கானின் ஆட்டத்தை ரசித்து பார்த்துள்ளார். அவர் தொலைக்காட்சியில் நேரலையில் போட்டியை கண்டுகளித்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.