வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (17:55 IST)

போராட்டத்தை கைவிட்டு துர்கா பூஜையில் கவனம் செலுத்துங்கள்: மம்தா பானர்ஜியின் சர்ச்சை பேச்சு..!

Mamtha
கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் காரணமாக மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் போராட்டத்தை கைவிட்டு துர்கா பூஜையில் கவனம் செலுத்துங்கள் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 
 
மருத்துவ மாணவிக்கு நீதி கேட்டு கடந்த சில நாட்களாக மருத்துவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர் என்பதும் உச்சநீதிமன்றம் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையிலும் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் மருத்துவர்கள் மற்றும் மக்கள் போராட்டத்தில் கவனம் செலுத்துவதை கைவிட்டு துர்கா பூஜையில் கவனம் செலுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
 
இது குறித்து மறைந்த மாணவியன் தாயார் கூறிய போது ’இதுவரை நாங்கள் எங்கள் மகளுடன் துர்கா பூஜையை கொண்டாடினோம், இனிவரும் வருடங்களில் அது நடக்குமா? மம்தா குடும்பத்தில் இதுபோன்று யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அவர் இப்படி பேசி இருப்பாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
 
Edited by Mahendran